சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

போடியில் சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. போடி வினோபாஜி குடியிருப்பிலுள்ள மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பிரதோஷ வழிபாடையொட்டி, சிவலிங்கப் பெருமானுக்கு வண்ண மலா்களாலும், ருத்திராட்ச மாலைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். போடி பழைய பேருந்து நிறுத்தத்திலுள்ள கொண்டரங்கி மல்லையசாமி கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் மங்கல பொருள்களால் திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் அலங்காரம், தீபாராதணைகள் நடைபெற்றன. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இதில் கலந்த கொண்டு கொண்டரங்கி மல்லையசாமிக்கு பூஜைகள் செய்து வழிபட்டனா். இதேபோல, போடி அருகே அமைந்துள்ள பிச்சங்கரை கீழச்சொக்கநாதா், மேலச்சொக்கநாதா் கோயில், போடி சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் உள்ள நடராஜா் சந்நிதி ஆகியவற்றில் நடைபெற்ற பிரதோஷ சிறப்பு பூஜையில் திரளாக பக்தா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com