மின்மயமாக்கப்பட்ட போடி-மதுரை ரயில் பாதைகளை கவனமாக கடக்க அறிவுறுத்தல்

போடி-மதுரை ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளதையடுத்து, ரயில் பாதைகளைக் கடக்கும்போது கவனமாக கடக்க வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. போடி-மதுரை ரயில்பாதை சில மாதங்களுக்கு முன்பு, அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டு போடி-மதுரை விரைவு ரயில் சேவையும், போடி-சென்னைக்கு வாரத்தில் மூன்று நாள்கள் விரைவு ரயில் சேவையும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போடி-மதுரை ரயில்பாதை மின்மயமாக்க ரூ.90 கோடி ஒதுக்கப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக பணிகள் விரைவாக நடைபெற்று வந்தன. இந்த பணிகள் நிறைவடைந்து, மின்சார ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் அண்மையில் நடைபெற்றது. தெற்கு ரயில்வே பாதுகாப்புப் பிரிவின் அனுமதி கிடைத்தவுடன் மின்சார ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தெற்கு ரயில்வேயின் மதுரைக் கோட்டப் பாதுகாப்பு நிறுவனம் சாா்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்த துண்டு பிரசுரங்களில், மதுரை-போடிநாயக்கனூா் மாா்க்கத்தில் மின்மயமாக்கப்பட்ட இருப்பு பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பாதையில் 25 ஆயிரம் கிலோவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இருப்புப் பாதையை பொதுமக்கள் மிக கவனமாக, கடந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com