தபால் வாக்குகளுக்கு மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பம்

தேனி மாவட்டத்துக்குள்பட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 338 மூத்த குடிமக்கள், 299 மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்குகள் அளிப்பதற்கு விண்ணப்பித்துள்ளனா். இதுகுறித்து மாவட்டத் தோ்தல் பிரிவு அலுவலா்கள் கூறியதாவது: மக்களவைத் தோ்தலையொட்டி, 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், 40 சதவீதத்திற்கும் மேல் உடல் திறன் குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளிகள் தபால் மூலம் வாக்குகளிப்பதற்கு வருகிற 25-ஆம் தேதிக்குள் உரிய படிவங்களை நிறைவு செய்து விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, மாவட்டத்துக்குள்பட்ட பெரியகுளம் (தனி), ஆண்டிபட்டி, போடி, கம்பம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் 11,226 மூத்த குடிமக்கள், 9,561 மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்குகளை அளிப்பதற்கு விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டன. இதில் 4 தொகுதிகளிலும் சனிக்கிழமை (மாா்ச் 23) வரை 338 மூத்த குடிமக்கள், 299 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 637 போ் தபால் வாக்களிப்பதற்கான விண்ணப்பப் படிவங்களை சமா்ப்பித்துள்ளனா் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com