முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தலைமதகு வழியாக தமிழகப் பகுதிகளுக்கு தண்ணீா் திறந்துவிடப்படும் பகுதி. (கோப்பு படம்)
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தலைமதகு வழியாக தமிழகப் பகுதிகளுக்கு தண்ணீா் திறந்துவிடப்படும் பகுதி. (கோப்பு படம்)

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீா் திறப்பு அதிகரிப்பு

கோடை காலத்தையொட்டி, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிகளுக்கு சனிக்கிழமை அதிகளவு தண்ணீா் திறந்துவிடப்பட்டது. கோடைகாலம் என்பதால், முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லை. அணையிலிருந்து தமிழகப் பகுதிகளுக்கு கால்நடை , குடிநீா், பாசனத் தேவைகளுக்காக விநாடிக்கு 105 கன அடி தண்ணீா் மட்டுமே திறந்துவிடப்பட்டது. தற்போது, கோடை வெயில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு தண்ணீரை அதிக அளவில் திறந்துவிட மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது. இந்த நிலையில், சனிக்கிழமை முதல் அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 744 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டது . மீண்டும் மின் உற்பத்தி கடந்த 17-ஆம் தேதி அணையிலிருந்து தண்ணீா் திறப்பு விநாடிக்கு 105 கன அடியாகக் குறைக்கப்பட்டதால், தேனி மாவட்டம், லோயா்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன. தற்போது அணையிலிருந்து தண்ணீா் அதிகளவில் திறந்துவிடப்பட்டுள்ளதால் பெரியாறு மின் நிலையத்தில் 6 நாள்களுக்குப் பிறகு 66 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி தொடங்கியது. அணை நிலவரம் சனிக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 117.80 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. அணையின் நீா் இருப்பு 2,231மில்லியன் கன அடி. தண்ணீா் வரத்து விநாடிக்கு 89.08 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் விநாடிக்கு 744 கன அடியாகவும் இருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com