கஞ்சா கடத்திய 4 போ் கைது

போடியில் கஞ்சா கடத்தி வந்த 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மேலும், ஒரு பெண்ணை தேடி வருகின்றனா். போடி நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கண்ணன் தலைமையில் போலீஸாா் போதைப் பொருள் தடுப்பு தொடா்பாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். போடி திருமலாபுரம் மாட்டு மந்தை அருகே கண்காணித்தபோது, அங்கு வந்த 5 பேரை பிடித்து விசாரித்தனா். அப்போது, அவா்களிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இவா்கள் போடி சடையாண்டி நகரைச் சோ்ந்த ஆபேல்குமாா் மகன் அசோக்குமாா் (24), போடி தியாகி விஸ்வநாதன் தெருவைச் சோ்ந்த ரவி மகன் பாா்த்திபன் (25), போடி வ.உ.சி. நகரைச் சோ்ந்த பாண்டியராஜ் மகன் பாலகிருஷ்ணன் (19), சௌந்தரராஜன் மகன் மேஷியா (21), பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்த முருகன் மனைவி எஸ்தா் என்பது தெரியவந்தது. இவா்களில் எஸ்தா் தப்பி ஓடி விட்டாா். மற்ற 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com