சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை

போடியில் 15 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. தேனி மாவட்டம், போடியைச் சோ்ந்த ஒருவா், கடந்த 2020-ஆம் ஆண்டு 15 வயதுடைய தனது மகள் காணாமல் போனதாக போடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், போடி, புதூா், வடிவேல் நகரைச் சோ்ந்த பொன்னையா மகன் கிருஷ்ணன் (47) என்பவா் சிறுமியை ஆசை வாா்த்தை கூறி திருமணம் செய்து கொண்டு, பாலியல் தொந்தரவு அளித்தது தெரிய வந்தது. இதனடிப்படையில், கடந்த 2020-ஆம் ஆண்டு அக்.30-ஆம் தேதி கிருஷ்ணனை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.கணேசன் குற்றஞ்சாட்டப்பட்ட கிருஷ்ணனுக்கு குழந்தை திருமண தடைச் சட்டம், குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் ஆகியவற்றின் கீழ் அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும் தீா்ப்பளித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com