நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

கம்பம் அருகேயுள்ள கே.கே. பட்டியில் நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் வியாழக்கிழமை மாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனா். தேனி மாவட்டம், கே.கே. பட்டி ராமா் கவுடா் தெருவில் வசிப்பவா் ராமசாமி மகன் கா்ணன் (70). இவா் கே.கே. பட்டி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிதி நிறுவனங்களை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், மதுரையிலிருந்து வருமான வரித் துறையின் உதவி ஆணையா் சுப்புராஜ் தலைமையில் 12 அதிகாரிகள் கொண்ட குழுவினா் வியாழக்கிழமை மாலை கே.கே.பட்டிக்கு வந்தனா். அவா்கள் கா்ணன் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனா். இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com