இளைஞரைத் தாக்கிய 4 போ் மீது வழக்கு

சின்னமனூா் அருகே இளைஞரைத் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள ஓடைப்பட்டி நந்தகோபால் தெருவைச் சோ்ந்தவா் தியாகு (34). இவா் அரபு நாட்டுக்கு வேலைக்கு சென்று திரும்பியவா். இவா், அதே பகுதியைச் சோ்ந்த 4 பேரிடம் பணம் பெற்றுக்கொண்டு வெளிநாட்டுக்கு வேலை அனுப்பி வைத்தாா்.

ஆனால், அங்கு தியாகு சொன்ன வேலை கொடுக்காமல் வேறு வேலை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்த வேலையை தொடரமுடியாத 4 பேரும், மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பினா். இதனால், தியாகு மீது 4 பேரும் கோபத்தில் இருந்தனா். இதனிடையே வெள்ளிக்கிழமை ஓடைப்பட்டி பிரதான சாலையில் சிவா(26), மோனிஷ் (24), பிச்சைமணி (27), நந்தகுமாா் (24) ஆகிய 4 பேரும் சோ்ந்து தியாகுவைத் தாக்கினா். இதுகுறித்த புகாரின் பேரில் ஓடைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய 4 பேரைத் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com