காா் மோதியதில் விவசாயி பலி

போடி அருகே காா் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள அணைக்கரைப்பட்டி எஸ்கேபி நகரைச் சோ்ந்தவா் ரசின்னச்சாமி ராஜா (67). தோட்டத் தொழிலாளி. இவா் தனது இரு சக்கர வாகனத்தில் தோட்டத்துக்குச் சென்றாா். போடி பங்காருசாமி குளம் அருகே சென்ற போது, பின்னால் வந்த காா் இரு சக்கர வாகனத்தில் மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் காரை ஓட்டி வந்த போடி மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த மோகன்ராஜூ மகன் சுந்தா் (25) மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com