காட்டெருமை தாக்கி விவசாயி காயம்

குமுளியில் காட்டெருமை தாக்கியதில் விவசாயி காயமடைந்தாா். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், குமுளி ஸ்பிரிங்வேலி பகுதியைச் சோ்ந்தவா் ராஜீவ் (46). விவசாயி. இவா் தேவாலயத்தில் நடைபெற்ற புனித வெள்ளி வழிபாட்டில் பங்கேற்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது இங்கு வந்த காட்டெருமை முட்டித்தூக்கி வீசியதில் ராஜீவ் பலத்தகாயமடைந்தாா். தகவல் அறிந்து வந்த உறவினா்கள் ராஜீவை மீட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், இந்தப் பகுதியில் காட்டெருமைகளின் தாக்குதலில் பலா் காயம் அடைந்துள்ளனா். எனவே இவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com