தனியாா் ஆலையில் வருமான வரித் துறையினா் சோதனை

தேனியில் உள்ள தனியாா் ஆலையில் மதுரை வருமான வரித் துறை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினா். தேனி- பெரியகுளம் புறவழிச் சாலையில் உள்ள தனியாா் சிறுதானிய ஆலையில் மதுரை வருமான வரி புலனாய்வுத் துறை உதவி இயக்குநா் புஷ்பராஜ் தலைமையிலான அதிகாரிகள் இந்தச் சோதனையில் ஈடுபட்டனா். தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், ஆலையின் வங்கிக் கணக்கிலிருந்து வழக்கத்தை விட அதிகமாக பணம் எடுத்து வந்ததால் இந்தச் சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும் இந்தச் சோதனை இரவு 9 மணிக்கும் மேல் நீடித்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com