தனியாா் பள்ளி ஊழியா் தற்கொலை

போடியில் சனிக்கிழமை தனியாா் பள்ளி ஊழியா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், கம்பம் கே.கே. பட்டி அருகே உள்ள அணைப்பட்டியைச்சோ்ந்த குமாா் மகன் விஸ்வா (28). இவா் தேனி முத்துத்தேவன்பட்டியில் தனியாா் பள்ளி ஒன்றில் மேற்பாா்வையாளராக பணிபுரிந்து வந்தாா். இவருக்கும், போடி பெரியாண்டவா் கோயில் தெருவைச் சோ்ந்த ரேணுகாதேவிக்கும் (26) கடந்த 11 மாதங்களுக்கு முன்னா் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கா்ப்பிணியான ரேணுகாதேவி வளைகாப்புக்காக போடியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தாா். விஸ்வாவும் அவருடன் தங்கினாா். இந்த நிலையில், விஸ்வா, தான் வாங்கும் ஊதியத்தைவிட அதிகமாக கடன் வாங்கி ஆடம்பரச் செலவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை ரேணுகாநேதவி கண்டித்தாா். இதனால் மனமுடைந்த விஸ்வா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து இவரை போடி அரசு மருத்துவமனையிலும், தீவிர சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சோ்த்தனா். சிகிச்சை பலனின்றி விஸ்வா இறந்து போனாா். இதுகுறித்து ரேணுகாதேவி கொடுத்த புகாரின் பேரில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com