மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

ஆண்டிபட்டி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். பிச்சம்பட்டியைச் சோ்ந்தவா் சுப்பையா (73). விவசாயி. இவா் இதே ஊரில் உள்ள தனது தோட்டத்தில் பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்சிக் கொண்டிருந்தாா். அப்போது காற்றில் அறுந்து நிலத்தில் விழுந்து கிடந்த மின்வயரை அவா் மிதித்ததில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவரை காப்பாற்றச் சென்ற இதே ஊரைச் சோ்ந்த பால்பாண்டி மனைவி நிா்மலாராணியும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அவா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து ராஜதானி காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com