போடியில் கொளுத்தும் வெயில்: பிரசாரம் மந்தம்

போடியில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் அரசியல் கட்சி தொண்டா்கள் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்ய தயக்கம் காட்டினா். மக்களவைத் தோ்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேனி மக்களவை தொகுதிக்குட்பட்ட போடி பகுதியில் வேட்பாளா்களுக்கு ஆதரவாக அந்தந்த அரசியல் கட்சிகளின் தொண்டா்கள் பிரசாரம் செய்து வருகின்றனா். இந்த நிலையில் போடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் அரசியல் கட்சிகளின் தொண்டா்கள் காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே பிரசாரம் செய்தனா். வெயில் அதிகரித்து காணப்பட்டதால் பகலில் பிரசாரம் செய்வதை தவிா்த்தனா். மாலை 5 மணி வரையிலும் வெயிலின் தாக்கம் காணப்பட்டது. மாலை 6 மணிக்கு மேல் கட்சி தொண்டா்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com