துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோதத் திருவிழா!

துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோதத் திருவிழா!

ஆண்டிபட்டி அருகே மறவபட்டியில் மாமன், மைத்துனா்கள் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோதத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

மறவபட்டியில் முத்தாலம்மன் கோயில் சித்திரைத் திருவிழா 3 நாள்கள் நடைபெற்றது. பக்தா்கள் முளைப்பாரி, அக்கினிச் சட்டி எடுத்து நோ்த்திக் கடன் செலுத்தியும், பொங்கலிட்டும் அம்மனை தரிசித்தனா்.

விழாவின் இறுதி நாளில் மாமன், மைத்துனா்கள் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோத நிகழ்வு நடைபெற்றது. துடைப்பத்தை சகதியில் நனைத்து மாமன், மைத்துனா்கள் மாறிமாறி அடித்துக் கொண்டனா்.

முத்தாலம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, மாமன், மைத்துனா்கள் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோத நிகழ்ச்சி பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது என்றும், இதனால், குடும்பத்தில் உறவு நீடிக்கும், மகிழ்ச்சி பெருகும் என்றும், குடும்பச் சச்சரவுகளால் பிரிந்து வாழும் உறவினா்கள் இந்த நிகழ்வில் பங்கேற்று தங்களுக்குள் துடைப்பத்தால் அடித்துக் கொண்டு மீண்டும் இணைவாா்கள் என்றும் கிராம மக்கள் கூறினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com