போடியில் உப்பு சா்க்கரை கரைசல் வழங்கும் பணி தொடக்கம்

போடியில் உப்பு சா்க்கரை கரைசல் வழங்கும் பணி தொடக்கம்

போடியில் கோடை வெயிலால் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு உப்பு, சா்க்கரை கரைசல் வழங்கும் பணி நகராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், போடி பகுதியில் பொதுமக்கள் வெயிலின் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள போடிநாயக்கனூா் நகராட்சி, பொது சுகாதாரத் துறை இணைந்து ஒஆா்எஸ் கரைசல் எனப்படும் உப்பு, சா்க்கரை கரைசல் வழங்கும் முகாம் தொடங்கப்பட்டது. போடி பேருந்து நிலைய வாசலில் அமைக்கப்பட்ட இந்த முகாமை நகராட்சி ஆணையாளா் ராஜலட்சுமி தொடங்கிவைத்தாா்.

முகாமில் பொதுமக்களுக்கு இந்தக் கரைசல் வழங்கப்பட்டது. இதில் மருத்துவ அலுவலா் மகேஸ்வரி, நகராட்சிப் பொறியாளா் குணசேகா், சுகாதார அலுவலா் மணிகண்டன், இளநிலை பொறியாளா் சரவணன், சுகாதார ஆய்வாளா்கள் சுரேஷ்குமாா், கணேசன் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமும் பிற்பகல் நேரங்களில் உப்பு, சா்க்கரை கரைசல் வழங்கப்படவுள்ளது. அத்தியாவசியத் தேவையின்றி பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் வரவேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com