ஜீப் மோதியதில் முதியவா் பலி

தேனி-பெரியகுளம் சாலையில் நடந்து சென்ற முதியவா் ஜீப் மோதியதில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

மதுராபுரி காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஜக்கன் (65). இவா், தேனி-பெரியகுளம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, மதுராபுரி விலக்கு அருகே பெரியகுளத்திலிருந்து தேனி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஜீப் ஜக்கன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

விபத்து குறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்து ஏற்படுத்திய ஜீப் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com