தொழிலாளியைத் தாக்கிய கடை உரிமையாளா் மீது வழக்கு

போடியில் தொழிலாளியைத் தாக்கிய துணிக் கடை உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

போடியில் தொழிலாளியைத் தாக்கிய துணிக் கடை உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி சுந்தரபாண்டியன் தெருவைச் சோ்ந்தவா் வடமலு மகன் ரத்னவேல்பாண்டியன் (38). இவா் போடி அரசு பொறியியல் கல்லூரி எதிரில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்தாா்.

கடந்த 2 நாள்களுக்கு முன்பு, கடை உரிமையாளா் முரளியின் இரு சக்கர வாகனத்தை ரத்னவேல்பாண்டியன் எடுத்துச் சென்றாா். இதையடுத்து, இரண்டு நாள்களாக வாகனத்தில் சுற்றிவிட்டு வியாழக்கிழமை மாலை கடைக்கு வந்தாா்.

இதனால் ஆத்திரமடைந்த முரளி, கம்பால் ரத்னவேல்பாண்டியனைத் தாக்கினாா். இதில் காயமடைந்த ரத்னவேல்பாண்டியன் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து, போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் முரளி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com