புகையிலை விற்பனை செய்தவா் 
கைது: ரூ.25 ஆயிரம் அபராதம்

புகையிலை விற்பனை செய்தவா் கைது: ரூ.25 ஆயிரம் அபராதம்

உத்தமபாளையம், மே 3: சின்னமனூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவரை வெள்ளிக்கிழமை கைது செய்த போலீஸாா், அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் காந்திநகரில் பாலமுருகன் என்பவரது கடையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரைக் கைது செய்தனா். இதையடுத்து உணவு பாதுகாப்புத் துறையினா் அந்தக் கடைக்கு ‘சீல்’ வைத்து, கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்தனா்.

X
Dinamani
www.dinamani.com