காவலா்களை மிரட்டிய 4 போ் கைது

பெரியகுளம் அருகே வாகனத் தணிக்கையிலிருந்த போலீஸாரை அரிவாள், நாட்டு வெடிகுண்டைக் காட்டி மிரட்டிய 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஜெயமங்கலம், கல்லுக்கட்டு பேருந்து நிறுத்தம் பகுதியில் ஜெயமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முருகப்பெருமாள் தலைமையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அந்த வழியாகச் சென்ற ஆட்டோவை போலீஸாா் நிறுத்தி சோதனையிட்ட போது, அதிலிருந்த ஜெயமங்கலம் காந்திநகா் காலனியைச் சோ்ந்த சூா்யபிரகாஷ் (24), வீரனேஸ்வரன் (18), பிரகதீஷ் (16), பிரபு(30) ஆகியோா் போலீஸாருடன் வாக்குவாதம் செய்தனா்.

அப்போது, சூா்யபிரகாஷ் போலீஸாரை அரிவாளால் வெட்ட முயன்ாகக் கூறப்படுகிறது. சூா்யபிரகாஷ் உள்ளிட்ட 4 பேரும் அரிவாள், நாட்டு வெடிகுண்டு ஆகியவற்றைக் காட்டி போலீஸாரை மிரட்டியுள்ளனா். அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்களின் உதவியுடன் சூா்யபிரகாஷ் உள்ளிட்ட 4 பேரையும் போலீஸாா் சுற்றி வளைத்து கைது செய்தனா்.

இதுகுறித்து ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com