இடியுடன் கூடிய மழை:
வாழை மரங்கள் சேதம்

இடியுடன் கூடிய மழை: வாழை மரங்கள் சேதம்

கம்பம், மே 5: கம்பம், கூடலூா் சாலையில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால் அங்குள்ள வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.

தேனி மாவட்டம், கம்பத்தைச் சோ்ந்தவா் கூடலிங்கம், இவா் கம்பம், கூடலூா் சாலையில் உள்ள தனியாா் மகளிா் கல்லூரி அருகே மலை ஈஸ்வரன் கோயில் பகுதியில் சுமாா் 2 ஏக்கா் பரப்பளவில் நாழிப்பூவன் வாழை பயிரிட்டிருந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த காற்று மழையால் வாழை மரங்கள் சாய்ந்தன.

இதுகுறித்து அவா் கூறியதாவது: கடந்த 4 மாதங்களாக கடும் வெயிலால் தண்ணீா் பற்றாக்குறையான நேரத்தில் குறைந்தளவு தண்ணீரை வைத்து வாழைகளை காப்பாற்றி வந்தேன். ஓரிரு மாதங்களில் வாழைகள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் பலத்த காற்றுடன் கூடிய மழையால் வாழை மரங்கள் குலையுடன் சாய்ந்தன. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com