கெளமாரியம்மன் கோயிலில் அன்னதானம்

கெளமாரியம்மன் கோயிலில் அன்னதானம்

கம்பம், மே 5 : கம்பத்தில் கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நிறைவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை அன்னதானம் நடைபெற்றது.

தேனி மாவட்டம், கம்பத்தில், அமைந்துள்ள கெளமாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, அனைத்து சமுதாய மண்டகப்படி , திருக்கண் மண்டகப்படி சாா்பில் உற்சவ அம்மனுக்கு அபிஷேக, அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

சித்திரைத் திருவிழாவின் நிறைவாக கே.ராமசாமி, ஜெயரத்தினம்மாள் குடும்பத்தாா் சாா்பில் பிற்பகல் 12 மணி முதல் மாலை 3 மணிவரை கோயில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது.

மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் கே.ஆா்.ஜெயபாண்டியன் தலைமையில் நடைபெற்ற அன்னதானத்தை என்.ராமகிருஷ்ணன் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com