மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

போடி பகுதியில் மா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தேனி மாவட்டத் தலைவா் எஸ்.கே.பாண்டியன், போடி வட்டத் தலைவா் இ.மூக்கையா ஆகியோா் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:

தமிழக அரசு விவசாயிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் போடி வட்டாரத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மா பயிா் செய்து, பெரும் விளைச்சல் தரும் என காத்திருந்தனா்.

இந்த நிலையில் இயற்கை சீற்றத்தால் மா விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 25 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com