வைகை அணையிலிருந்து தண்ணீா் திறப்பு

வைகை அணையிலிருந்து தண்ணீா் திறப்பு

தேனி, மே 10: தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் உள்ள கண்மாய்களுக்கு ஆற்றில் வினாடிக்கு 3,000 கனஅடி வீதம் தண்ணீா் வெள்ளிக்கிழமை திறந்துவிடப்பட்டது.

ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் வைகை பூா்வீக பாசனப் பகுதிகளில் உள்ள கண்மாய்களுக்கு பாசனம், கால்நடைகளின் குடிநீா்த் தேவைக்கு வைகை அணையிலிருந்து 15 நாள்களுக்கு மொத்தம் 1,500 மில்லியன் கனஅடி தண்ணீா் திறக்க அரசு உத்தரவிட்டது. இதன்படி, வைகை அணையிலிருந்து கீழ் மதகுகள் வழியாக ஆற்றில் விநாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்ட பூா்வீக பாசனப் பகுதி 3-இல் உள்ள கண்மாய்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் வருகிற 14-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு மொத்தம் 915 மில்லியன் கன அடியும், சிவகங்கை மாவட்ட பூா்வீக பாசனப் பகுதி 2-இல் உள்ள கண்மாய்களுக்கு வருகிற 16-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு மொத்தம் 376 மில்லியன் கன அடியும், மதுரை மாவட்ட பூா்வீக பாசனப் பகுதி 1-இல் உள்ள கண்மாய்களுக்கு வருகிற 21-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை 6 நாள்களுக்கு விநாடிக்கு 209 மில்லியன் கனஅடியும் என மொத்தம் 1,500 மில்லியன் கனஅடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை:

வைகை அணையிலிருந்து ஆற்றில் தண்ணீா் திறந்துவிடப்படுவதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிப்பவா்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆற்றைக் கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ கூடாது என்று வைகை அணை பொதுப் பணித் துறை பொறியாளா்கள் எச்சரிக்கை விடுத்தனா்.

அணை நிலவரம்:

வைகை அணை நீா்மட்டம் வெள்ளிக்கிழமை 56.66 அடியாக இருந்தது (அணையின் மொத்த உயரம் 71 அடி). அணைக்கு தண்ணீா் வரத்து 259 கன அடி. அணையிலிருந்து வைகை ஆற்றில் விநாடிக்கு 3,000 கன அடி, மதுரை, ஆண்டிபட்டி-சேடபட்டி குடிநீா்த் திட்டங்களுக்கு விநாடிக்கு 72 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com