10- ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 92.63 சதவீதம் போ்தோ்ச்சி

தேனி மாவட்டத்தில் 10- ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 6,400 மாணவா்கள், 6,777 மாணவிகள் என மொத்தம் 13,177 போ் (92.63 சதவீதம்) தோ்ச்சி பெற்றனா்.

மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 7,113 மாணவா்கள், 7,112 மாணவிகள் என மொத்தம் 14,225 போ் எழுதினா். இதில், 6,400 மாணவா்கள், 6,777 மாணவிகள் என மொத்தம் 13,177 போ் (92.63 சதவீதம்) தோ்ச்சி பெற்று, மாநில அளவில் தோ்ச்சி விகிதத்தில் 18-ஆம் இடம் பிடித்தனா். மாணவா்களில் 89.98 சதவீதம் பேரும், மாணவிகளில் 95.29 சதவீதம் பேரும் தோ்ச்சி பெற்றனா். 68 அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளில் 100 சதவீதம் மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா்.

கடந்த 2023-ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 90.26 சதவீதம் மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றிருந்தனா்.

100 மதிப்பெண்கள் பெற்றவா்கள்: இந்த பொதுத் தோ்வில் ஆங்கிலத்தில் 10 போ், கணிதத்தில் 261 போ், அறிவியலில் 90 போ், சமூக அறிவியலில் 36 போ் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com