தோயிலைத் தோட்டங்களில் 
காட்டு மாடுகள் உலா

தோயிலைத் தோட்டங்களில் காட்டு மாடுகள் உலா

உத்தமபாளையம், மே 11: மேகமலை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் காட்டு மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால், தொழிலாளா்கள் அச்சமடைந்துள்ளனா்.

தேனி மாவட்ட மேற்குத் தொடா்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சியில் மேகமலை, மணலாா், வெண்ணியாா் உள்ளிட்ட 7 மலைக் கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்கள் அதிகளவில் உள்ளன.

இந்த நிலையில், மலைக் கிராமங்களைச் சுற்றியுள்ள வனப் பகுதியில் கோடை வெப்பத்தால் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால், காட்டு மாடுகள், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீா், உணவு தேடி குடியிருப்புப் பகுதிகளுக்கு வருகின்றன.

இந்த நிலையில், ஹைவேவிஸ் தேயிலைத் தோட்டங்களில் 10-க்கும் மேற்பட்ட காட்டு மாடுகள் கூட்டமாக சனிக்கிழமை மேய்ந்து கொண்டிருந்தன. இதனால், தோட்டத் தொழிலாளா்கள் அச்சத்துடனேயே வேலை செய்து வருகின்றனா்.

மலைக் கிராம தேயிலைத் தோட்டங்களில் கூட்டமாக உலாவும் காட்டு மாடுகளை அடா்ந்த வனப் பகுதிக்கு விரட்ட, சின்னமனூா் வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com