நாகமணியம்மாள் பள்ளி
100 சதவீத தோ்ச்சி

நாகமணியம்மாள் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

கம்பம், மே 11 : பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி பெற்றது.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் இந்தப் பள்ளி மாணவி லக்ஷனா 496 மதிப்பெண்களும், மாணவா் அஜய் 495 மதிப்பெண்களும் பெற்றனா். இதேபோல, பொதுத் தோ்வில் இந்தப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி பெற்றது.

சிறப்பிடம் பிடித்த மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளி தாளாளா் எம்.எஸ்.எஸ்.காந்தவாசன், இணைச் செயலா் சுகன்யா ஆகியோா் தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவா்களை பாராட்டி பரிசுகளை வழங்கினா்.

இதில் பள்ளி முதல்வா் புவனேஸ்வரி, துணை முதல்வா்கள் லோகநாதன், சரவணன், யோகா பயிற்சியாளா்கள் ராஜேந்திரன், ரவிராம், ஆசிரியா், ஆசிரியைகள், பெற்றோா், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com