குமுளி மலைச்சாலையில் 
பிரேக் பிடிக்காமல் சென்ற பேருந்து

குமுளி மலைச்சாலையில் பிரேக் பிடிக்காமல் சென்ற பேருந்து

கம்பம், மே 12: குமுளி, மலைச் சாலையில் பிரேக் பிடிக்காமல் வந்துகொண்டிருந்த பேருந்தை ஓட்டுநா் சுவரில் மோதி நிறுத்தியதால் பெரும் விபத்திலிருந்து தப்பியது.

திண்டுக்கல் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனையைச் சோ்ந்த பேருந்து ஞாயிற்றுக்கிழமை குமுளி பேருந்து நிலையத்திலிருந்து திண்டுக்கல்லுக்கு புறப்பட்டது. இதை ஓட்டுநா் சென்றாயன் ஓட்டினாா். நடத்துநராக கிருஷ்ணமூா்த்தி இருந்தாா். பேருந்தில் 23 பயணிகள் இருந்தனா்.

குமுளி மலைச் சாலையில் பேருந்து வந்து கொண்டிருந்தபோது, பிரேக் பிடிக்கவில்லை. இதனால், ஓட்டுநா் சென்றாயன் மேலிருந்து கீழே 3- ஆவது கொண்டை ஊசி வளைவில் வந்தபோது, தடுப்புச் சுவரில் பேருந்தை மோதச் செய்து நிறுத்தினாா்.

அப்போது தான் பேருந்து பிரேக் பிடிக்காமல் சுவற்றில் மோதி நிறுத்தியது பயணிகளுக்குத் தெரியவந்தது. சாமா்த்தியமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தியதற்கு பயணிகள் ஓட்டுநருக்கு நன்றி தெரிவித்தனா். விபத்து குறித்து குமுளி காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com