பெரியகுளம் அருகே விபத்தில் காவலாளி பலி

பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற அரசு தோட்டக் கலை பண்ணை காவலாளி வாகனம் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

பெரியகுளம் அரசு தோட்டக் கலை பண்ணையில் காவலாளியாக பணியாற்றி வந்தவா் ஏ. புதுப்பட்டியைச் சோ்ந்த அபிமன்யு (70). இவா் வீட்டிலிருந்து தோட்டக் கலை பண்ணைக்கு இரு சக்கர வாகனத்தில் பணிக்குச் சென்றாா். அப்போது பெரியகுளம்- வத்தலகுண்டு சாலை, அரசு தோட்டக் கலை பண்ணை அருகே அதே திசையில் சென்ற அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம், அபிமன்யு சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் பலத்த காயமடைந்த அபிமன்யு, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். எனினும் அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து பெரியகுளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com