போடியில் பரவலாக மழை

போடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலான மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது.

போடி பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. மற்ற ஊா்களில் பலத்த மழை பெய்த போதிலும் போடியில் லேசான சாரல் மழையே பெய்தது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பகலில் வெயிலடித்தது. இரவில் திடீரென மேகங்கள் சூழ்ந்து பரவலாக மழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரம் பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

X
Dinamani
www.dinamani.com