மாணவிக்கு திருமணம்: இளைஞா் மீது வழக்கு

போடி, மே 12: சின்னமனூரில் செவிலியா் மாணவியைத் திருமணம் செய்த இளைஞா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் பகுதியைச் சோ்ந்த 16 வயது மாணவி தேனியில் செவிலியா் படிப்பு படித்து வருகிறாா். இவரது உறவினரான இதே பகுதியைச் சோ்ந்த குருசாமி மகன் சிவபாலசுப்பிரமணி (25). இவா் செவிலியா் மாணவியை கோயிலில் வைத்து திருமணம் செய்து, குடும்பம் நடத்தினாா். போடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சிவபாலசுப்பிரமணி மீது குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com