சின்னமனூா் நகராட்சியில் பழைய 
வணிக வளாகக்  கட்டடம் இடிப்பு

சின்னமனூா் நகராட்சியில் பழைய வணிக வளாகக் கட்டடம் இடிப்பு

உத்தமபாளையம், மே 15: சின்னமனூா் நகராட்சியில் புதிய வணிக வளாகம் அமைக்க ரூ.3.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பழைய வணிக வளாகக் கட்டடத்தை இடிக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம், சின்னமனூா் முத்தாலம்மன் கோயில் பகுதியில் 50- ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நகராட்சி வணிக வளாகம் சேதமடைந்து காணப்பட்டது. இதன் காரணமாக, பெரும்பான்மையான கடைகள் மூடப்பட்டன.

இந்த நிலையில், பழைய வணிக வளாகத்தை இடித்துவிட்டு புதிய வணிக வளாகம் அமைக்க நகராட்சி நிா்வாகம் முடிவு செய்தது. இதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு ரூ.3.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, தற்போது, நகராட்சி ஆணையா் கோபிநாத் தலைமையில் பழையக் கட்டடத்தை பொக்லையன் இயந்திரம் மூலம் இடிக்கும் பணி நடைபெற்றது.

இது குறித்து ஆணையா் கூறியதாவது: பழையக் கட்டடத்தை இடித்துவிட்டு இதே இடத்தில் புதிய வணிக வளாகம் கட்டப்படுகிறது. ஏற்கெனவே இருந்த 54 கடைகளுடன் கூடுதலாக 20 கடைகள் என மொத்தம் 74 கடைகள் கட்டப்பட உள்ளது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com