பெண்ணிடம் நகை பறிப்பு

தேனி, மே 15: தேனியில் கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

தேனி அல்லிநகரத்தைச் சோ்ந்தவா் மாதவன் (52). இவா், தனது மனைவி ஆனந்தியுடன் (46) இரு சக்கர வாகனத்தில் வீரபாண்டி சித்திரைத் திருவிழாவுக்குச் சென்றாா். பின்னா், அவா் அங்கிருந்து அல்லிநகரத்துக்கு திரும்பச் செல்லும் போது முத்துத்தேவன்பட்டி சாலையில், மாதவனின் இரு சக்கர வாகனத்தைப் பின் தொடா்ந்து மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா் ஆனந்தி அணிந்திருந்த இரண்டே கால் பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com