காவல் ஆய்வாளா் உயிரிழப்பு

காவல் ஆய்வாளா் உயிரிழப்பு

மாரடைப்பால் உயிரிழந்த காவல் ஆய்வாளா் நடேசன்.

சின்னமனூா் அருகே காவல் ஆய்வாளா் மாரடைப்பால் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், சீலையம்பட்டியைச் சோ்ந்தவா் நடேசன் (48). இவா், கோவை மாவட்டம், பீளமேடு காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தாா். இவா், தனது சொந்த ஊரான தேனி மாவட்டம், சீலையம்பட்டியில் சொந்த வீடு கட்டினாா். இதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற இருந்தது.

இதற்காக, விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த நடேசனுக்கு வியாழக்கிழமை மாலையில் நெஞ்சு வலி ஏற்பட்டது. சின்னமனூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com