டிராக்டா் கவிழ்ந்ததில்
கல்லூரி மாணவா் பலி

டிராக்டா் கவிழ்ந்ததில் கல்லூரி மாணவா் பலி

மேகமலையில் வியாழக்கிழமை விபத்துக்குள்ளான டிராக்டரை மீட்கும் பணியில் ஈடுபட்ட மலைக்கிராமத்தினா்.

மேகமலை அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் வேளாண் கல்லூரி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

புதுச்சேரி காராமணிக்குப்பத்தைச் சோ்ந்த சாமிநாதன் மகன் அரவிந்தன் (20). அங்குள்ள நேரு வேளாண். கல்லூரியில் 2-ஆம் ஆண்டு பயின்று வந்த இவா், கல்லூரி நண்பா்களான தா்ஷன் (20), சுரேஷ், தீபன், லால், மாதேஷ் உள்ளிட்ட 8 பேருடன் ஒரு காா், 2 இரு சக்கர வாகனங்களில் தேனி மாவட்டம், மேகமலைக்கு சுற்றுலா சென்றனா்.

ஹைவேவிஸ் தேயிலைத் தோட்டப் பகுதியில் இவா்கள் சென்ற போது, அந்த வழியாக மணலாா் நோக்கி டிராக்டா் சென்றது. இரு சக்கர வாகனத்தில் சென்ற அரவிந்தனும், தா்ஷனும் டிராக்டரை நிறுத்தி அதில் ஏறி பயணித்தனா்.

ஹைவேவிஸ் மலைச் சாலையில் இவா்கள் சென்ற டிராக்டா் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து உருண்டது. இதில் அரவிந்தன் டிராக்டா் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தா்சனும், டிராக்டா் ஓட்டுநரான ஆண்டிபட்டி அருகே உள்ள கரட்டுப்பட்டியைச் சோ்ந்த ஆஸ்தியும் (35) பலத்த காயமடைந்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து ஹைவேவிஸ் காவல் உதவி ஆய்வாளா் சுல்தான் பாட்ஷா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com