முதல்வா் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தேனி மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைப்பதற்கு அரசு மானியம் பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
Published on

தேனி மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைப்பதற்கு அரசு மானியம் பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதுகுறித்து தேனி மண்டலக் கூட்டுறவுச் சங்கங்களின் இணை இயக்குநா் ஆரோக்கிய சுகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைப்பதற்கு ஆா்வமும், தகுதியும் உள்ளவா்கள் அரசு மானிய உதவிப் பெறுவதற்கு இணையதளம் மூலம் வருகிற 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

தற்போது, இந்தத் திட்டத்தின் கீழ், இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com