தேனி
பெட்டிக்கடையில் திருடியவா் கைது
போடியில் பெட்டிக் கடையில் பீடி, சிகரெட், பணம் திருடிய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
போடியில் பெட்டிக் கடையில் பீடி, சிகரெட், பணம் திருடிய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
போடி பங்கஜம் பிரஸ் பின்புற தெருவைச் சோ்ந்தவா் ரெங்கசாமி மகன் மனோகரன் (66). இவா் இதேப் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா்.
திங்கள்கிழமை இரவு வழக்கம்போல் கடையைப் பூட்டிவிட்டு சென்றவா் மீண்டும் செவ்வாய்க்கிழமை காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இரும்பு கதவு திறந்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து உள்ளே சென்று பாா்த்தபோது பீடி கட்டுகள், சிகரெட் பெட்டிகள், ரூ.3500 ஆகியவை திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து போடி நகா் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் போடி நகராட்சி குடியிருப்பைச் சோ்ந்த கருப்பையா மகன் கண்ணன் (20) இவற்றை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸாா் கண்ணனைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.