தேனியில் பள்ளி மாணவிகளுக்கு தடகளப் போட்டி

தேனியில் பள்ளி மாணவிகளுக்கு தடகளப் போட்டி

Published on

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சமூக நலத் துறை, விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை, தடகள விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற போட்டிகளை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா தொடங்கி வைத்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இந்திராணி, மதுரை விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளா் வேல்முருகன், மாவட்ட சமூக நல அலுவலா் சியாமளாதேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாணவிகளுக்கு ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இதில், 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பிறகு, முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், பயிற்சியாளா்கள், விளையாட்டு ஆசிரியா்களுக்கு மாவட்ட ஆட்சியா் நினைவுப் பரிசுகளை வழங்கினாா்.