தேனி
முதல்வா் மருந்தகத்துக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
தேனி மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைப்பதற்கு அரசு மானியம் பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
தேனி மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைப்பதற்கு அரசு மானியம் பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இதுகுறித்து தேனி கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ஆரோக்கிய சுகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைப்பதற்கு அரசு மானியம் பெறுவதற்கு இணையதளம் மூலம் சனிக்கிழமைக்குள் (நவ.30) விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, இந்தக் கால அவகாசம் வருகிற 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.