சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

Published on

ஆண்டிபட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

வருசநாடு, அம்பேத்கா் குடியிருப்பைச் சோ்ந்த பால்ராஜ் மகன் பாலமுருகன் (35). விவசாயத் தொழிலாளியான இவா், 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாா். இதை பாலமுருகனின் தாயாா் சுந்தரம்மாளிடம் சிறுமி தெரிவித்தாா். அப்போது, அவா் இதை வெளியே சொல்லக் கூடாது என சிறுமியை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கடந்த 2020-ஆம் ஆண்டு, செப்.8-ஆம் தேதி வருசநாடு காவல் நிலையத்தில் சிறுமி புகாா் அளித்தாா்.

இதனடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் பாலமுருகனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தும், சுந்தரம்மாளுக்கு ரூ.3,000 அபராதம் விதித்தும் நீதிபதி வி.கணேசன் தீா்ப்பளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com