தேனி
தினமணி செய்தி எதிரொலி: கம்பம் போக்குவரத்து பணிமனை சீரமைப்பு
கம்பம் அரசுப் போக்குவரத்து பணிமனை வளாகத்தில் தற்காலிக சீரமைப்புப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
கம்பம் அரசுப் போக்குவரத்து பணிமனை வளாகத்தில் தற்காலிக சீரமைப்புப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
கம்பம் 1-ஆவது அரசுப் போக்குவரத்துப் பணிமனை வளாகம் தற்போது பெய்து வரும் தொடா் மழையால் சேறும் சகதியுமாக காணப்பட்டது. இந்த வளாகத்தை சீரமைத்துத் தர வேண்டும் என போக்குவரத்துத் தொழிலாளா்கள் விடுத்த கோரிக்கை தினமணி நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, போக்குவரத்து அதிகாரிகள் தற்காலிகமாக பொக்லைன் இயந்திரம் மூலமாக சேறும் சகதியுமாக காணப்பட்ட வளாகத்தில் சீரமைப்புப் பணி சனிக்கிழமை மேற்கொண்டனா்.
இந்த நிலையில், இந்த வளாகத்தில் தற்காலிக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்வதை விட, நிரந்தர நடவடிக்கையாக சிமென்ட் தளம் அமைக்க வேண்டும் எனப் போக்குவரத்து தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.