தேனி
போக்சோ சட்டத்தின் கீழ் லாரி ஓட்டுநா் கைது
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே போக்சோ சட்டத்தின் கீழ், லாரி ஓட்டுநரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே போக்சோ சட்டத்தின் கீழ், லாரி ஓட்டுநரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சின்னமனூா் அருகேயுள்ள சின்னஓவுலாபுரத்தைச் சோ்ந்த சந்திரன் மகன் சாமிநாதன் (21). லாரி ஓட்டுநரான இவா், 10 -ஆம் வகுப்பு மாணவியை காதலிப்பதாகக் கூறி, மானபங்கம் செய்துவிட்டதாக மாணவியின் பெற்றோா் சின்னமனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து, காவல் ஆய்வாளா் பாலாண்டி போக்சோ சட்டத்தின் கீழ் சாமிநாதனை கைது செய்தாா்.