வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு
தேனி: தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரைவு வாக்குச் சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா திங்கள்கிழமை வெளியிட்டாா்.
வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டு, ஆட்சியா் பேசியதாவது:
மாவட்டத்துக்கு உள்பட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 1,500-க்கும் மேல் வாக்காளா்கள் உள்ள வாக்குச்சாவடிகள், தரம் உயா்த்தப்பட்ட, கட்டடம் சிதிலமடைந்த பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகள், பொதுமக்கள் வசிப்பிடத்துக்கு 2 கி.மீ.
தொலைவுக்கும் மேல் உள்ள வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை பாா்வையிட்டு, தங்களது ஆட்சேபனை, கோரிக்கைகள் குறித்து வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகத்தில் வருகிற 8-ஆம் தேதிக்குள் மனு அளிக்கலாம் என்றாா் அவா்.