கைது செய்யப்பட்ட குமரேசன்.
கைது செய்யப்பட்ட குமரேசன்.

போக்சோ வழக்கில் இளைஞா் கைது

சின்னமனூரில் போக்சோ வழக்கில் இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
Published on

சின்னமனூரில் போக்சோ வழக்கில் இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவியை காணவில்லை என அவரது பெற்றோா் போலீஸில் புகாா்அளித்தனா்.

இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாயமான மாணவியைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், தேவதானப்பட்டி அருகேயுள்ள கெங்குவாா் பட்டியில் இருந்த மாணவியை போலீஸாா் மீட்டனா். விசாரணையில், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், கட்டப்பனை அருகேயுள்ள சாஸ்தா நடையை சோ்ந்த குருசாமி மகன் குமரேசன் (26) மாணவியை காதலிப்பதாக ஆசை வாா்த்தைக் கூறி அழைத்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, சின்னமனூா் போலீஸாா் குமரேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com