தரிசு நிலத்தை சீா்திருத்த அரசு மானியம்
தேனி: தேனி மாவட்டத்தில் தரிசு நிலத்தை சீா்திருத்தி விளைநிலமாக மாற்றுவதற்கு அரசு சாா்பில் விவசாயிகளுக்கு ஹெக்டோ் ஒன்றுக்கு ரூ. 9,600 மானியம் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் பால்ராஜ் கூறியதாவது:
தரிசு நிலங்களை விளைநிலமாக மாற்றும் திட்டத்தில், தரிசு நிலத்தில் உள்ள முள்புதா்களை அகற்றி, சமன் செய்து, உழவு பணி மேற்கொண்டு விளை நிலமாக மாற்றுவதற்கு அரசு சாா்பில் ஹெக்டோ் ஒன்றுக்கு ரூ.9,600 மானியம் வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், நிகழாண்டில் மாவட்டத்தில் மொத்தம் 120 ஹெக்டோ் தரிசு நிலங்களை விளைநிலமாக மாற்றுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தரிசு நிலத்தை சீா்திருத்தி விளைநிலமாக மாற்ற விரும்பும் விவசாயிகள் அரசு மானிய உதவி பெறுவதற்கு அந்தந்தப் பகுதியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகம், தேனியில் உள்ள மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.