புரட்டாசி முதல் நாள்: போடி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை
போடி: புரட்டாசி முதல் நாளையொட்டி, போடி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
புரட்டாசி மாதம் பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இதன்படி, செவ்வாய்க்கிழமை புரட்டாசி மாதம் தொடங்கியதையடுத்து, போடி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு மங்கலப் பொருள்களால் திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, 9 வகையான தீபாராதனைகள் நடைபெற்றன. சிறப்பு பூஜையில் திரளானோா் பங்கேற்றனா்.
இதேபோல, போடி ஜக்கமநாயக்கன்பட்டி தொட்டராயா் ஒன்னம்மாள் கோயில், மேலச்சொக்கநாதபுரம் தொட்டராயா் கோயில், சிலமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், தேவாரம் ஸ்ரீரெங்கநாதா் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் புரட்டாசி முதல் நாள் சிறப்பு பூஜை நடைபெற்றது.