தேனி
போடி அருகே கஞ்சா விற்றவா் கைது
போடி அருகே சட்டவிரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்து விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
போடி அருகே சட்டவிரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்து விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
போடி அருகே உள்ள மேலச்சொக்கநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மேலச்சொக்கநாதபுரம் பட்டாளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த பொன்னையன் மகன் பிரபாகரன் (31) கஞ்சாவை பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் பிரபாகரனை கைது செய்தனா்.