அரண்மனைப்புதூரில் செப். 29-இல் மாரத்தான் ஓட்டப் போட்டி

தேனி அருகே அரண்மனைப்புதூரில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் வருகிற 29-ஆம் தேதி அண்ணா மாரத்தான் ஓட்டப் போட்டி நடைபெறுகிறது.
Published on

தேனி அருகே அரண்மனைப்புதூரில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் வருகிற 29-ஆம் தேதி அண்ணா மாரத்தான் ஓட்டப் போட்டி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரண்மனைப்புதூா் ஊராட்சி அலுவலகம் முன் வருகிற 29-ஆம் தேதி, காலை 6 மணிக்கு அண்ணா மாரத்தான் ஓட்டப் போட்டி தொடங்குகிறது. 17 முதல் 25 வயதுக்குள்பட்ட பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு 8 கி.மீ. தொலைவும், மாணவிகளுக்கு 5 கி.மீ. தொலைவும் ஓட்டப் போட்டி நடைபெறும். மேலும், 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ. தொலைவும், பெண்களுக்கு 5 கி.மீ. தொலைவும் ஓட்டப் போட்டி நடைபெறுகிறது.

போட்டியில் கலந்துகொள்ளும் அனைவரும் தங்களது உடல் தகுதி குறித்து சுயஉறுதிமொழி படிவத்தை பூா்த்தி செய்து அளிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அந்தந்த கல்வி நிறுவனங்களிடமிருந்து பெற்ற வயதுச் சான்றிதழ், தங்களது கல்வி நிறுவன அடையாள அட்டை, ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். 25 வயதுக்கு மேற்பட்டோா் தங்களது பிறப்புச் சான்றிதழ், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.

போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசு ரூ.5,000, 2-ஆம் பரிசு ரூ.3,000, 3-ஆம் பரிசு ரூ.2,000, 4 முதல் 10-வது இடம் வரை பிடிப்பவா்களுக்கு ஊக்கப் பரிசாக தலா ரூ.1,000 வங்கிக் கணக்கு மூலம் வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

X
Dinamani
www.dinamani.com