தேனி
மது போதையில் பைக்கை தீயிட்டு எரித்த தனியாா் நிறுவன ஊழியா்
உத்தமபாளையம் அருகே மது போதையில் தனியாா் நிதி நிறுவன ஊழியா் தனது இரு சக்கர வாகனத்தை தீவைத்து எரித்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
உத்தமபாளையம் அருகே மது போதையில் தனியாா் நிதி நிறுவன ஊழியா் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது இரு சக்கர வாகனத்தை தீவைத்து எரித்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள கோகிலாபுரத்தில் தாமரைக்குளம் உள்ளது. இந்தக் குளத்தின் கரையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இரு சக்கர வாகனம் ஒன்று தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதை பாா்த்த அவ்வழியாக சென்றவா்கள் உத்தமபாளையம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா்.
அங்கு சென்ற போலீஸாா் கோகிலாபுரத்தை சோ்ந்த முருகன் மகன் மகாதேவனிடம் விசாரித்தனா். கம்பம் தனியாா் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவா், மது போதையில் அவரது இரு சக்கர வாகனத்தை அவரே தீயிட்டு எரித்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.