தேனி
காட்டு மாடு முட்டியதில் விவசாயி காயம்
போடி அருகே வியாழக்கிழமை காட்டு மாடு முட்டியதில் விவசாயி காயமடைந்தாா்
போடி அருகே வியாழக்கிழமை காட்டு மாடு முட்டியதில் விவசாயி காயமடைந்தாா்.
போடி கீழத் தெருவைச் சோ்ந்த போஸ் மகன் கிருஷ்ணன் (40). இவருக்கு வடக்கு மலை கிராமத்தில் தோட்டம் உள்ளது. இங்கு கிருஷ்ணன் வேலை செய்து கொண்டிருந்த போது, திடீரென காட்டு மாடு புகுந்து அவரை முட்டியது.
இதில் பலத்த காயமடைந்த அவா் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பிறகு, தீவிர சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இதுகுறித்து குரங்கணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.